கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி மோகன்குமார் ஆகியோர், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசார் கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததால் கார்த்திக்கிற்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மீது நேற்று நள்ளிரவில் சில சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதுடன், உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்துறை காவலர்கள் உடனடியாக தலையிட்டு கார்த்திக்கை மீட்டு சிறை மருத்துவப் பிரிவிற்கு கொண்டு சென்று, பின்னர் உடல்நிலை காரணமாக நள்ளிரவு நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே முக்கிய குற்றவாளி மீது சிறைக்குள்ளேயே தாக்குதல் நடைபெற்றிருப்பது கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...