சாமி கும்பிடுவது போல் நடித்து வைசியாள் வீதி கோவிலில் தங்க நகைகள் திருட்டு: ஒருவர் கைது

கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், பக்தர் போல் நுழைந்த நபர் ஒருவர் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்கச் சங்கிலிகளை திருடிய சம்பவத்தில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பெரிய கடை வீதி போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நரசிம்மர் (61) என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலைத் திறந்து பூஜைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், காலை 7.20 மணி அளவில் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக சென்றபோது, சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தலா 6 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த ஒருவர், பக்தர் போல கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவது போல் நடித்து, சிலைகளில் இருந்த தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கடை வீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில்பிரபு (45) என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவிலில் பக்தர் போல நடித்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...