கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் இன்று அதிகாலை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை கர்நாடக, கேரளா, ஆந்திரா பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்துகளில் பயணித்தவர்களின் உடைமைகள், பார்சல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மோப்பநாய் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டன.



மேலும், நகரின் பல்வேறு பார்சல் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெளியூர்களில் இருந்து வந்த மற்றும் அனுப்பப்படவிருந்த பார்சல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனையின்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம், போதைப்பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பார்சல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், இதுபோன்ற தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கோவைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுபோன்ற தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...