பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation) வலியுறுத்தியுள்ளது.


கோவை: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், இந்த வரிவிலக்கு உரிய காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இந்திய ஜவுளித் தொழில்துறைக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்று மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (Recycling Textile Industries Federation - RTF) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து இந்தியாவுக்கு பருத்தி இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி செய்ய வேண்டிய காலகட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அது தொழில்துறையினருக்கு பயனளிக்கும் என்றார்.

மேலும், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவில் தரமான பருத்தி பற்றாக்குறை நிலவுவதால், நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மைக் காலமாக பருத்தி விலை உயர்வு காரணமாக ஜவுளித் துறையின் உற்பத்திச் சங்கிலியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் கடனை நம்பி தொழில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், முன்னர் 60 நாட்களுக்கு தேவையான பருத்தியை இருப்பு வைக்க போதுமான நிதி வசதிகள் இருந்த நிலையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தேவையான அளவு பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்த ஜெயபால், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட பிற தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கு ஏன் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், பருத்திக்கான விலையை நிர்ணயிக்கும் போது தரமான பருத்திக்கு ஒரு விலையும், தரம் குறைந்த பருத்திக்கு குறைந்த விலையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அனைத்து வகை பருத்திக்கும் ஒரே விலை நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...