DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கடுமையாக கண்டித்துள்ளது. வேலைவாய்ப்பு கோரி நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டத்தை திரித்து அரசியல் செய்ய முயற்சிப்பதாக DYFI குற்றம்சாட்டியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதற்கு DYFI கோவை மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்பட்டு வரும் ஜனநாயக அமைப்புகள் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டனத்திற்குரியவை என்று தெரிவித்துள்ளனர்.

அரசியல் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மதிக்காமல், வெறுப்புணர்வையும் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டும் வகையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்மையில் DYFI சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதையும், கோவை மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயகப் போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற போராட்டத்தை திரித்துக் கூறி, அவதூறு பரப்பும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யக் கோருவது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் DYFI தெரிவித்துள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு கேட்பது குற்றமல்ல என்றும், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை பறிப்பதே மக்களுக்கு எதிரான செயல் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை மிரட்டல்களாலும், பொய்யான குற்றச்சாட்டுகளாலும் முடக்க முடியாது என்றும், மக்கள் நலன், சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...