கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது ஆணையாளராக பொறுப்பேற்றார். சிவகுரு பிரபாகரன், IAS பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட கட்டா ரவி தேஜா, IAS இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கோவை மாநகராட்சியின் 30-வது ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...