கோவையில் சுவரொட்டி ஒட்டியவருக்கு ரூ.10,000 அபராதம்: மேலும் கடும் நடவடிக்கை எச்சரிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ், சுவரொட்டிகளை அகற்றவும், தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதிக்கவும், சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார். போத்தனூர் நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ், விளம்பர அட்டைகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராக மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த விளம்பரங்கள் அகற்றப்படுவதுடன், தொடர்புடையவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆகிய ஐந்து மண்டலங்களின் வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பொது இடங்கள், சாலையின் மையத் தடுப்புகள், மின்கம்பங்கள் ஆகியவற்றில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் மற்றும் விளம்பர சுவரொட்டிகள் மாநகராட்சியின் மூலம் அகற்றப்படும்.




தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-ன் படி, மாநகரில் விளம்பரப் பலகை, மின்னணு திரை மற்றும் விளம்பர அட்டை ஆகியவற்றில் விளம்பரம் செய்ய மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் 15 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பம் செய்து, அதற்கான உரிய தொகையைச் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய விளம்பர அச்சு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 117-ன் படி விளம்பரப் பலகைகள் வைப்பவர்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.20,000 அபராதம் அல்லது கைது நடவடிக்கை ஆகிய இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.




பிளக்ஸ், விளம்பர அட்டைகள் வைப்பவர்கள் மீது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.




மேலும், தெற்கு மண்டலம் போத்தனூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...