கோவையில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை

தொண்டாமுத்தூரரை அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இளம் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஒரு தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இளம் பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டின் முன் பெட்ரோல் தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் குற்ற எண் 84/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ரவுடி கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்ற மாரியப்பன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறிய நிலையில், கார்த்தி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த இளம்பெண் கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து, எரியக்கூடிய திரவம் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி அங்கிருந்து தப்பிசென்றார்.



இதையடுத்து கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய அமைக்கப்பட்ட 3 தனிப்படைகளில் ஒரு குழுவினர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கு பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நோக்கில் பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...