கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணி முடிக்க அறிவுறுத்தினார். சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் இன்று காலை போஸ்டர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., உத்தரவின் பேரில் இப்பணி நடைபெற்றது.






வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு, சுத்தம் செய்யப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.



இதேபோல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். இப்பணியில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...