வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை, இயக்க வளர்ச்சி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தனர்.

Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வி தி லீடர் இயக்கத்தின் உள்ளரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள மாறுவோம் மாற்றுவோம் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பாக, கூடலூர் கவுண்டம்பாளையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு பாலாஜி உத்தம ராமசாமி தலைமை வகித்தார். பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார். சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்புரை வழங்கினார்.



கூட்டத்தில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, புதிய இயக்கத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் தனிநபர் தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது என்றும், பொதுமக்களை நேரில் சந்தித்து இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்டப் பொருளாளர் பிரபு, முன்னாள் செயலாளர் சாந்தி, பிரவீன், விஜயகுமார், மாரிசாமி, எல்.ஐ.சி. பாலு, கூடலூர் நகராட்சிக் கவுன்சிலர் கல்யாணசுந்தரம், கிருபாகரன், வீரபாண்டி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் மகேந்திரன், மகேந்திரராஜ், சரவணகுமார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...