ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.03 கோடி அபராதம் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில், இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி பகுதியில், கடந்த 2012-ஆம் ஆண்டு "ஆதவன்" என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். முதலீட்டாளர்களை கவரும் வகையில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படுவதுடன், 24 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குறுதிகளை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்த நிலையில், முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியின்படி தொகை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 115 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்களான ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணையில் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதன்படி, சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...