கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிம்முடு அஜித் குமார் (35), கார் விற்பனை பெயரில் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். இவர் மீது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்திலும் கார் விற்பனை செய்வதாகக் கூறி இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலக் குறைவு இருப்பதாக தெரிவித்ததால், கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். காலில் ஏற்பட்ட காயம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடன் மேலும் மூன்று கைதிகளும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில், கைதிகள் வார்டுக்கும் மகளிர் சிகிச்சைப் பிரிவுக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புப் பகுதியை ஒட்டியிருந்த கழிப்பறை பகுதியில் இருந்த துவாரத்தை பயன்படுத்தி பிம்முடு அஜித் குமார் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். முகத்தை துணியால் மூடியபடி மகளிர் வார்டு வழியாக மருத்துவமனையை விட்டு வெளியேறிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நள்ளிரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், தப்பியோடிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். பின்னர், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை காவலில் எடுத்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பிம்முடு அஜித் குமார் நீண்ட நாட்களாக திட்டமிட்டு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் தப்பிச் செல்ல உதவியதாக கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கைதி தப்பிய சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி, காவலர்கள் பாரதிதாசன் மற்றும் அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கோவை மாநகர காவல்துறை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கைதி தப்பிய சம்பவத்தில் காவல்துறையினரே சிக்கியிருப்பதும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...