கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு, அதிலிருந்து 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இன்று காலை ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மினி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில், மினி லாரியில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், லாரியில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்.

பிடிபட்ட மினி லாரி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்கள் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...