50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மீட்ட போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த டி. கிருஷ்ணன், பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக ரூ.40 ஆயிரம் கீழே விழுந்துள்ளது. இதனை அருகில் இருந்த ஒருவர் எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பி-2 ஆர்.எஸ்.புரம் புலனாய்வு பிரிவு காவல் நிலைய சரக உதவி ஆணையர் செல்லதுரை உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் காமாட்சிநாதன் வழிகாட்டுதலில், சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை காவலர்கள் சிந்தன், நாகூர் கனி மற்றும் இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையின் போது சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணத்தை எடுத்துச் சென்ற நபரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் இரண்டு நாட்கள் வெளியூரில் இருந்ததும், பின்னர் தாமாக முன்வந்து பணத்தை ஒப்படைக்க தயாராக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் எடுத்துச் சென்ற ரூ.40 ஆயிரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் முன்னிலையில் உரியவரான கிருஷ்ணனிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...