ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் ‘டீம் ரிலே’ போட்டியில் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


கோவை: உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த கோவை வீரர், வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு திறமையை நிரூபித்துள்ளனர்.


ஜூன் 21 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ‘ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘டீம் ரிலே’ பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.


நேற்று நடைபெற்ற டீம் ரிலே போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில், கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருவரும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் போட்டியிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.




வீராங்கனை ஹாசினி இதுவரை 15 தேசிய பதக்கங்களையும், 2 சர்வதேச பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே மவுண்டன் பைக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறார். அதேபோல் வீரர் பிரனேஸ் 9 தேசிய பதக்கங்களையும், 4 சர்வதேச பதக்கங்களையும் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக மவுண்டன் பைக்கில் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அரசின் STAD (Sports Development Authority of Tamil Nadu) பிரிவு வீரர்களுக்கு தேவையான பயணச் செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.




வெண்கலப் பதக்கம் வென்ற ஹாசினி மற்றும் ப்ரனேஸுக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், கோவை சைக்கிளிங் அசோசியேஷன், பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...