தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 192 பேர் இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ஜூன் 22, 2026 அன்று இந்த முகாம் நடத்தப்பட்டது.



காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் Dr. கா. சுப்ரமணியன் இந்த இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். சிங்காநல்லூர் ESI ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் Dr. உமாசரோஜினி தனது மருத்துவ குழுவினருடன் இம்முகாமை திறம்பட நடத்தி வந்தார்.



இம்முகாமில் பல்கலைக்கழக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 192 பேர் தானமாக இரத்த தானம் செய்தனர். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முகாம் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியது.

இரத்த தானம் செய்வது உயிர் காக்கும் பெருமையான செயல் என்பதை வலியுறுத்தி, தொடர்ந்தும் இது போன்ற முகாம்களை ஏற்பாடு செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...