கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டினார். தினசரி சுகாதார பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் சுகாதார மேம்பாடு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வழிகாட்டினார்.



ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் DBC பணியாளர் மற்றும் RR டீம் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. பின்னர் bleaching பவுடர் போடப்பட்டு, தண்ணீர் தொட்டிக்கு abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வார்டு ஆய்வாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் வருகை பதிவேடு மற்றும் சமையலறை ஆய்வு செய்யப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்களும் உடன் இருந்தனர். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பராமரிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.



ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஆசை பேக்கரி முதல் மகாலட்சுமி கோயில் வரை சாலையோரத்தில் உள்ள மரக்குப்பைகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு, மரக்குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.



துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இதை நேரில் ஆய்வு செய்து, சாலையோரத்தில் உள்ள குப்பைகளை தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதிகளில் தினசரி சுகாதார பராமரிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.



பிளாக் மாரியம்மன் கோயில் வீதி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஆய்வு பணி நடைபெற்றது. வார்டு AE குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உடன் இருந்தார். மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.


Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...