அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி அமராவதி அணையில் 38.98 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 40.46 அடியாகவும் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் விவரம் வெளியிட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஜூலை 3 ஆம் தேதி நிலவரப்படி இரு அணைகளின் நீர்மட்ட விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருவதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 38.98 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 234 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைப்பதால், ஜூலை 3 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 40.46 அடியாக நீர்மட்டம் உள்ளது.


திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 382 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 370 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...