கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.241 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். செம்மொழிப் பூங்கா உள்வனமாதிரி அமைப்பு, பொதுக் கழிப்பிட கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் ரூ.241 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக நிறைவு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இன்று (08.07.2026) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வடக்கு மண்டலம் வார்டு எண் 30-க்கு உட்பட்ட கணபதி பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நுழைவு வாயில் மற்றும் அரங்க மேடைக்கான கட்டுமானப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.



மத்திய மண்டலம் வார்டு எண் 67-க்கு உட்பட்ட செம்மொழிப் பூங்கா வளாகத்தில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.198 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் உள்வனமாதிரி காட்சியமைப்பு அமைக்கும் பணிகளையும், வார்டு எண் 83-க்கு உட்பட்ட பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் மாநகராட்சி பொதுக் கழிப்பிட கட்டுமானப் பணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆணையாளரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டலம் வார்டு எண் 38-க்கு உட்பட்ட IOB காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண் 63-க்கு உட்பட்ட இராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் கழிவுநீர் குழாய் மேன்ஹோல்களில் ஏற்படும் அடைப்புகள், தேங்கியுள்ள சேறு, வண்டல் மண் மற்றும் கழிவுகளை விரைவாகவும் எளிதாகவும் சுத்தம் செய்யும் வகையில் பயன்படுத்தக்கூடிய Manhole Desilting Machine இயந்திரத்தின் செயல்பாடுகளை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அலுவலர்கள் விளக்கமளிக்கையில், "கழிவுநீர் உறிஞ்சும் Manhole De-silting Machine இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களை கழிவுநீர் கால்வாய்களில் இறக்கி சுத்தம் செய்யும் (Manual Scavenging) நடைமுறையை முற்றிலும் தவிர்க்கவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் கழிவுநீர் வடிகால் அமைப்பை மேலும் திறம்பட பராமரிக்க இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி பணிகள் குழுத்தலைவர் சாந்திமுருகன், உதவி ஆணையர்கள் நர்மதா, தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சத்தியமூர்த்தி, உதவி நகர திட்டமிடுநர் மகேந்திரன், உதவி பொறியாளர்கள் வானதி, சுபஸ்ரீ, சக்திவேல், கமலக்கண்ணன், பிரகதீஸ்வரன், சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெயபார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...