விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சூலூர் சிவகாமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), கடந்த 2010-ஆம் ஆண்டு தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருடன் இணைந்து, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவரிடம் இருந்து பொள்ளாச்சி அருகே சோலனூரில் உள்ள 97 மனைகளை வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த மனைகள் பட்டியலினத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் என்பதும், நில உரிமையாளர்களை ஏமாற்றி மணி அவற்றை விற்பனை செய்திருந்ததும் சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மணியிடம் கேட்டபோது, அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து நிலத்தை விரைவில் பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறியதுடன், போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்களையும் தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பத்திரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கட்டுமானப் பணியை நிறுத்தி, இது விவசாய நிலம், வீடு கட்ட அனுமதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மணி அவரைஏமாற்றியது சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலினருக்கான விவசாய நிலத்தை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மணி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...