கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றது.
Coimbatore: கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பெண் உள்பட 4 பேரை கைது செய்து 119 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ரத்தினபுரி கைக்கடை TASMAC கடை அருகே அமரர் ஜீவானந்தம் சாலையில் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நந்தி நகரைச் சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை உதவி ஆய்வாளர் அழகுமாரி செல்வம் கைது செய்தார். பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செல்வபுரம் பேரூர் மெயின் சாலை M.M. TASMAC அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்ற அண்ணா பாதை வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (46) என்பவரை உதவி ஆய்வாளர் ஜெகதீசன் கைது செய்தார். அவரிடம் இருந்து 17 வோட்கா, 6 ஓக் குவார்ட்டர், 17 எக்ஸ்பிரஸ் என மொத்தம் 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சரவணம்பட்டி கணபதி போலீஸ் குடியிருப்பில் உள்ள தேவாலயம் அருகே பதுங்கி மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த இளையராஜா (42) என்பவரை உதவி ஆய்வாளர் அருள்பெருமாள் கைது செய்தார். அவரிடம் இருந்து 26 வீரன் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கீதா மற்றும் போலீசார் சுந்தராபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பிள்ளையார்புரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற யசோதா (51) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மதுக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே மது விற்ற குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த பென்னி ஹரிஷ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகரம் முழுவதும் ஒரே நாளில் 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.