கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 2026 வரை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.97 லட்சம் குடும்ப உறுப்பினர்கள் இன்னும் Bio Metric அல்லது Iris பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர்.

மாவட்டத்தில் Antyodaya Anna Yojana குடும்ப அட்டைகள் (AAY), Priority Household குடும்ப அட்டைகள் (PHH) மற்றும் Non-Priority Household குடும்ப அட்டைகள் (NPHH) பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு Point of Sale (PoS) இயந்திரத்தில் விரல் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பணியில் AAY அட்டைகளில் 95.03%, PHH அட்டைகளில் 95.10% மற்றும் NPHH அட்டைகளில் 84.48% மட்டுமே நிறைவடைந்துள்ளது. கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை AAY அட்டைகளில் 7,033, PHH அட்டைகளில் 49,324 மற்றும் NPHH அட்டைகளில் 3,41,425 ஆக உள்ளது.

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் வெளியிட்ட அறிவிப்பின்படி, National Food Security Act-ன் கீழ் பயன்பெறும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய நியாய விலைக் கடைகளிலோ அல்லது அருகில் உள்ள நியாய விலைக் கடைகளிலோ ஜூலை 31, 2026 தேதிக்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடுபட்டுள்ள உறுப்பினர்களுக்கு கைரேகை பதிவு செய்வதற்கு வசதியாக, ஜூலை 11, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை பிற்பகல் நேரங்களில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்வார்கள்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கைரேகை பதிவு செய்யாத பயனாளிகள் எதிர்காலத்தில் ரேசன் பொருட்களை பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால், உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...