கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் திட்டங்கள் மற்றும் மாணவர் உதவித்தொகைக்காக 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினர். 125க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் இருந்து கலந்துகொண்டனர்.


Coimbatore: துடியலூர் அருகிலுள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001-ல் பட்டம் பெற்ற மாணவர்களின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 125க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். SNR Sons Charitable Trust இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கி, கடந்த 25 ஆண்டுகளில் Sri Ramakrishna Engineering College மற்றும் SNR Sons அறக்கட்டளை வளர்ந்த விதத்தை விவரித்தார்.




கல்லூரி முதல்வர் Dr. A. Soundararajan பேசும்போது, முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, இந்தியா மற்றும் வெளிநாடு கிளைகள் வளர்ச்சி அடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, முன்னாள் மாணவர்கள் தற்போதைய கல்லூரி மாணவர்களுக்கு Start-up தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், தொழில்முனைவோர் ஆவதற்கும், திறன் படைத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.


மேலும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் SNR Sons Charitable Trust கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி C.V. Ramkumar, தலைமை நிர்வாக அதிகாரி T. Mahesh Kumar, பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


முன்னதாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து "ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் – நல்ல வாழ்விற்காக அனைவரும் ஓடுவோம்" என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது.


இந்த மாணவர் விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வீணா மற்றும் பேராசிரியர் சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...