பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கடும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் மனு அளித்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.


Coimbatore:

கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன்பாளையம், வார்டு எண் 6-ல் உள்ள மகாலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள், சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி பேரூராட்சி தலைவர் என். ஜெனார்த்தனனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மகாலட்சுமி கார்டன் பகுதியில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர், கோரிக்கையை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் 6-வது வார்டு கவுன்சிலர் ச. மாரிமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...