ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை கணிதம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து 30 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் (INSA) கணிதத்துறை இணைந்து தொழில்துறை கணிதம் குறித்த கருத்தரங்கம் 16.07.2026 (வியாழக்கிழமை) மற்றும் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

கருத்தரங்கத்தின் தொடக்க விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar தலைமை வகித்தார். பயிலரங்கத்தின் சிறப்பு விருந்தினர்களாக, சாந்தி சொரூப் பட்நாகர் விருதாளர், தேசிய அறிவியல் அகாடமியின் மூத்த விஞ்ஞானி Dr. Maithili Sharan, கருத்தரங்கக் குழு வல்லுநர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறை முன்னாள் இயக்குநர் Dr. P. Kandasamy, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் Dr. S. Saravanan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்கின் தகவல் பலகையை வெளியிட்டனர். இக்கருத்தரங்கம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உயர்தரமான தொழில்துறை கணிதக் கல்வியை மேம்படுத்துவதையும், பரஸ்பரக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 30 கல்லூரிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் முன்னதாக கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர் Dr. N. Uma வரவேற்றுப் பேசினார். நிகழ்வினைக் கணிதத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...