நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

கோவை: நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, திராவிடத் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து, 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி.ஐ. வங்கி பகுதியிலிருந்து கோவை ரயில் சந்திப்பை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், "நீட் தேர்வை ரத்து செய்", "ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை தாக்குதலை கண்டித்தும் முழக்கமிட்டனர்.



ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறிய திராவிடத் தமிழர் கட்சியினரை போலீசார் தடுப்புகள் அமைத்து நிறுத்தினர். இருப்பினும், தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடத் தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதி தமிழன், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தனி மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆதி தமிழன் எச்சரித்தார்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...