கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் தொடர் காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்த ஆழியார் அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீர் வரத்தால் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி 55.55 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 273 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. மொத்த கொள்ளளவு அணையில் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 23.92 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு 969 கன அடி நீர் வரத்து உள்ளது. 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது. இதனால் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி நீர்மட்டம் 61.25 அடியை எட்டியுள்ளது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 365 கன அடி நீர் வரத்து உள்ளது மற்றும் 1321 கன அடி வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயரும் நிலையில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




தென்மேற்கு பருவமழை தொடர்ந்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...