கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்டும் சந்தித்து கோவைக்கு அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் கோவை திரும்பிய தாய் மற்றும் மகனை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

கோவை: கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்டும் சந்தித்து கோவைக்கு அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 1999-ஆம் ஆண்டு ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு பிழைப்புத் தேடி சுந்தரி தனது இரு மகன்களுடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு குடிபெயர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், 2003-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் பிரகாஷ் திடீரென காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல ஆண்டுகளாக தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பிரகாஷ் பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டிருந்ததும், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவர் சமீபத்தில் மீட்கப்பட்டதும் தெரியவந்தது.

பிரகாஷை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தேவையான அரசு ஆவணங்களைப் பெறுவதற்காக சுந்தரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரகாஷ் கோவையில் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் விரைவாக தயாரிக்கப்பட்டன.

அந்த ஆவணங்களுடன் பஞ்சாப் சென்ற சுந்தரியிடம், அங்குள்ள அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்த பின்னர் பிரகாஷை ஒப்படைத்தனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனை நேரில் பார்த்த சுந்தரி, கண்ணீருடன் அவரை ஆரத்தழுவி அணைத்துக் கொண்டார்.

மகனுடன் கோவை திரும்பிய சுந்தரியை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுந்தரி கூறுகையில், "23 ஆண்டுகளாக வடித்த கண்ணீருக்கும், இறைவனிடம் வைத்திருந்த நம்பிக்கைக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. என் மகன் எங்கோ உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையை ஒருநாளும் இழக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். யாரோ சிலர் கொத்தடிமையாக வைத்துக் கொடுமைப்படுத்தியதாகவும், பின்னர் அங்கிருந்த ஒருவரின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டதாகவும் கூறினான். என் மகனை மீண்டும் என்னுடன் சேர்க்க உதவிய மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர் முத்தையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...