வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொறுப்பாளர் மகுடீஸ்வரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பேருந்துகள் வழிமறிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தொண்டர்கள் காந்தி சிலை வளாகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.






தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வால்பாறை காந்தி சிலை வளாகம் அருகில் திமுக இளைஞரணி பொறுப்பாளர் மகுடீஸ்வரன், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் ஜே பி பாஸ்கர், நகர துணை செயலாளர் பிரபாவதி மற்றும் சரவண பாண்டியன் ஆகியோர் தலைமையில் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.






இந்நிகழ்வில் மகுடீஸ்வரன், செந்தில்குமார், கவுன்சிலர் பாஸ்கர், பிரபாவதி, கதிரேசன், சின்னச்சாமி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் கைது மற்றும் தொண்டர்கள் மீதான நடவடிக்கையால் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...