தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: கோவை மாநகர B3 வி.எச். ரோடு புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு பதிவான 100 கிராம் தங்க நகை வழிப்பறி வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அசோக் நகரைச் சேர்ந்த செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், அவரது ஊழியரிடம் 100 கிராம் தங்க நகையை கொடுத்து பொன்னையராஜபுரத்தில் உள்ள குளோபல் நக்ஷத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நண்பரிடம் ஒப்படைக்க அனுப்பியிருந்தார். அப்போது, குடியிருப்பு அருகே வந்தபோது இருவர் கத்தியை காட்டி 100 கிராம் தங்க நகையை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் B3 வி.எச். ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வலையபன் மற்றும் தெளபீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, வழக்குப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல் குற்றவாளியான வலையபன் 2023-ஆம் ஆண்டு உயிரிழந்ததால், இரண்டாவது குற்றவாளியான தெளபீக் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம், தெளபீக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...