10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படையில் 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் என பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை 19 மண்டலங்களாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

கோவை: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துடியலூர் அருகே நடைபெற்றது.
வடமதுரை வி.எஸ்.கே. நகரில் உள்ள லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மேலிடப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். கட்சித் தலைமையின் முடிவின்படி இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதேநேரம், மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1788889615006
தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. பூத் வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி 19 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி. மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் பி.டி. மோகன்ராஜ். மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். மகேஷ்குமார், வட்டாரச் செயலாளர் தம்பி பார்த்திபன்,
மாவட்டத் துணைத் தலைவர்கள், நகர மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...