புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


Coimbatore: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக தொழில் அமைப்பினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.



கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சில தொழிற்சாலைகள் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளே வெளிமாநிலங்களுக்கு செல்லலாமா என யோசிக்கும் சூழலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது சிரமமாகும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்தடை இருப்பதாகவும், அதை மின்வெட்டு இல்லை, மின்தடை எனக் கூறுவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார். அரசு நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறினால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகம் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் மீனவர்கள் பிரச்சனை, சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறிய ஈஸ்வரன், அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

சென்னையில் புதிய விமான நிலையம் தொழில் முதலீடுகளுக்கு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், பெரிய சரக்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்குவதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால் ஏற்றுமதிக்கான சரக்குகளை பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது தங்களது தொடர் கோரிக்கை எனத் தெரிவித்த அவர், எந்த ஆட்சி வந்தாலும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

இடைத்தேர்தல் குறித்து பேசிய ஈஸ்வரன், ஒரு கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பின்னர் வேறு கட்சியில் இணைந்து வேறு சின்னத்தில் வாக்கு கேட்பது குறித்து மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளதாகக் கூறினார். இதுபோன்ற அரசியல் முடிவுகள் குறித்து இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது தொடர்பான கேள்விக்கு, தனிநபர்களை இழிவுபடுத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான வரி குறித்து பேசிய அவர், டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியாக இருந்தாலும், அதை அடிப்படையாகக் கொண்டு அரசு வருவாய் ஈட்டும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் மக்கள் எதிர்ப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

கோவையில் L&T பைபாஸ் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈஸ்வரன் வலியுறுத்தினார். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சாலைகள் ரத்து செய்யப்படுவதால் அவை நிறைவேறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க L&T பைபாஸ் சாலை அவசியம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லை என்றால் முதலில் வரவேற்பவர்கள் தாங்கள்தான் எனக் கூறிய அவர், சில இடங்களில் லஞ்சம் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது என்றார். பட்ஜெட் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடைபெற்றால் அதனை வரவேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...