கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்செட் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து சாக்கடை கால்வாயில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளம் இதுவரை தெரியவில்லை. அவர் அந்தப் பகுதியில் வசிப்பவரா அல்லது வேறு பகுதியைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.