வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செப்டம்பர் 16 முதல் 18 வரை நடைபெறுகிறது. பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் மு. ரவீந்திரன் பயிற்சியைத் துவக்கி வைத்துப் பேசினார். தனி அலுவலர் (வெளியீடுகள்) முனைவர். மா.இரா. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல், ஆராய்ச்சி முன்மொழிவுகள், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. முனைவர் சு. உமேஷ் கண்ணா வரவேற்புரையும், முனைவர் த. சம்சாய் நன்றியுரையும் ஆற்றினர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி செப்டம்பர் 16.9.2026 முதல் 18.9.2026 வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியைத் துவக்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் மு. ரவீந்திரன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்கள், அறிவு மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிலரங்கு நடத்தப்படுவதாகக் கூறினார். மாணவர்களின் கல்வி வளர்ச்சி, நற்பண்புகள், திறன்கள் மற்றும் எதிர்காலத் தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கு குறித்தும், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் நவீன கற்றல் அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்.



உலகளாவிய தரநிலைகளையும், உருவாகி வரும் புதிய வாய்ப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவதற்குத் தேவையான நவீன கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை பேராசிரியர்களுக்கு வழங்கும் வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முனைவர் மு. ரவீந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனி அலுவலர் (வெளியீடுகள்) முனைவர். மா.இரா. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். பாரம்பரிய வகுப்பறை, கரும்பலகை அடிப்படையிலான கற்பித்தல் முறைகளைத் தாண்டி, கல்வித்துறையில் உருவாகி வரும் புதிய சிந்தனைகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சிக்கான தெளிவான தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டிற்கான வெளிப்படையான, தெளிவான மதிப்பீட்டு அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அறிவியல் சிறப்பின் அடிப்படையாக நேர்மையான, மீண்டும் மேற்கொள்ளக்கூடிய மற்றும் தடமறியக்கூடிய ஆராய்ச்சி அமைய வேண்டும் என்றும், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய சிந்தனைகள், அனுபவங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் முனைவர் மா.இரா. சீனிவாசன் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்பித்தல் முறைகள், உயர்தர ஆராய்ச்சி முன்மொழிவுகளை உருவாக்குதல், விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், இணையப் பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை, கல்விசார் செயலிகள், இந்தியக் கல்வி அமைப்பைப் புரிந்துகொள்ளுதல், கல்விசார் மேன்மைக்கான தர உறுதிப்பாடு, தர அறிவியல் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கான உத்திகள் ஆகிய தலைப்புகளில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வனவியல் துறை பேராசிரியர் மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. உமேஷ் கண்ணா வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் (ARM) முனைவர் த. சம்சாய் நன்றியுரையாற்றினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...