கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் 43 மின்கல இயக்க வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக செப்டம்பர் 19, 2026 அன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. அதே நிகழ்வில் வீடில்லா நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாமும் தொடங்கப்பட்டது.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக, சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் 43 மின்கல இயக்க வாகனங்கள் இன்று (19.09.2026) கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன.
மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீகிரி பிரசாத், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன.

தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனங்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் செய்தால், சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 43 வாகனங்கள் தலா 500 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகள்தோறும் சேகரமாகும் குப்பைகளை பிரித்து வழங்க ஏதுவாக, ஈரக்கழிவுகளுக்கு பச்சை நிறத் தொட்டியும், உலர் கழிவுகளுக்கு நீள நிறத் தொட்டியும், சுகாதார கழிவுகளுக்கு சிகப்பு நிறத் தொட்டியும், சிறப்பு கவன கழிவுகளுக்கு கருப்பு நிறத் தொட்டியும் என நான்கு வகைகளாக தரம் பிரிப்பதற்கான குப்பைத் தொட்டிகளுடன், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான வாகனங்களும் மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன.

முன்னதாக, அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் மாநகரில் வீடில்லா நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகரை 2030ஆம் ஆண்டுக்குள் வெறிநாய் நோய் இல்லாத மாநகரமாக மாற்றும் நோக்கத்துடன் வீடில்லா நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் வெறிநாய் நோயை ஒழிக்கும் இலக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னர், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, அமைச்சர் வே.சம்பத்குமாரிடம், பொதுமக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வெறிநாய் நோய் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, கால்நடை மருத்துவர் வருண்குமார், உதவி ஆணையர் நர்மதா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், இராதாகிருஷ்ணன், லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேவானந்த் விஜயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.