கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங்கநாயகி, பெருந்தலைவர் காமராஜரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 22, 2026-அன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் ஏற்கெனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 210 மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், இன்று தொடங்கிய விரிவாக்கத்தின் கீழ் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவர்களும் பயன்பெறுவர். மேயர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (22.09.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் ஒன்றான கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டார்.

மேயர் அவர்கள் இத்திட்டத்தினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு உணவினை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். இப்பள்ளியில், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 210 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இன்று தொடங்கி வைக்கப்பட்ட விரிவாக்கத்தின் கீழ், இப்பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவ, மாணவியர்கள் இனி பயன் பெறுவார்கள்.



இறுதியாக, நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கராத்தே தற்காப்பு கலை நிகழ்ச்சிகளையும் மேயர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் மரியராஜ், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (பொ), மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் சரண்யா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...