கோவை வெள்ளலூர் பகுதியில் நுழைந்த யானை மயக்க ஊசி மூலம் பிடிபட்டது- முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டம்

கோவை மாவட்டம், மதுக்கரை, வெள்ளலூர் பகுதியில் நான்கு பேரைக் கொன்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். கும்கி யானை மூலம் இந்த ஒற்றை யானை கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டுசெல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



கோவை, மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனிடையே, நேற்று இரவு போத்தனூர் கணேஷபுரம் பகுதியில் நுழைந்த அந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் விஜயகுமார் மற்றும் அவரின் மகள் காயத்ரியை (12) தாக்கியது. இதில் சிறுமி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் வெள்ளலூர் பகுதிக்குள் நுழைந்த அந்த யானை, அங்கு நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை தாக்கியது. தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, வெள்ளானபாளையம் பகுதிக்குள் நுழைந்த யானை தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் உள்ளிட்டு ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டனர். மேலும, இந்த காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து மாரியப்பன், கலீம், கோவை சாடிவயளில் இருந்து சுஜய், பாரி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



தொடர்ந்து, கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் மற்றும், மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் உள்ளிட்ட மூவரும் சுமார் 12.30 மணியளவில் யானைக்கு மயக்க ஊசியைச் செலுத்தி பிடித்தனர்.

இந்த ஒற்றை காட்டு யானையை முகாமுக்குக் கொண்டு செல்ல வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிதளவு மயக்கம் தெளிந்தவுடன் கும்கி யானைகளின் உதவியுடன் முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...