‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

கோவை ரேடியோ சிட்டி நடத்தும் ஆடியோ பிரிமியர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஞாயிறன்று மாலை 5 மணியளவில் கோவை, புரூக்பீல்ட் வணிகவளாகத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவரவிருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை தட்டியினை வெளியிட்டார்.



சுந்தர்.சி தயாரிப்பில் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி கதாநாயகனாக முதல் முறையாக நடித்துள்ள இந்த படத்திற்கு ‘மீசைய முறுக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதோடு அந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்டவற்றை எழுதி, இசை அமைத்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆதி. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.



இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையாக இருக்கும் என்றும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆதி, அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...