உள்ளாட்சி தேர்தலில் தீர்வு கிடைக்குமா? சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் நடைபெறவேண்டிய பல்வேறு பணிகள் நடைபெறாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு கழிந்தும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் மாநகராட்சி அலுவலர்களும் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 17-வது வார்டுக்குட்பட்ட மருதமலை சாலை சியோன் நகர் கிழக்கு ஐ.ஓ.பி காலனியில் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இன்றுவரை இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ஐ.ஓ.பி காலனி குடியிருப்புவாசிகள் சங்க துணைத் தலைவர் அர்புத்ராஜ் கூறுகையில்; 

இப்பகுதியில் இதுவரை சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலை வசதிக்காக கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான மேற்படி வேலைகள் நடைபெறவில்லை. கற்கள் சாலைகளில் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அருகில் கோயமுத்தூர் டையாபட்டிஸ் பவுண்டேஷன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களின் மூலம் நோயாளிகள் வரும் நிலையில், குண்டும், குழியுமான இந்த சாலையால் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்களும் பெரும் சிரமப்படுகின்றனர்.

மேலும், இந்த வார்டு வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளன. இங்கு தெரு விளக்கு இல்லாத நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழல் நிலவி வருகிறது. 

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு மனு அளித்தோம். இதனால் எவ்வித பலனும் இல்லை. மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து மாநகராட்சி பொறியாளரிடம் தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை. மேற்கொண்டு உதவி பொறியாளர் கருப்புசாமி பேசுகையில்; இப்பகுதி வேலைப்பணிக்கு இன்னும் செலவின மதிப்பீடு உறுதி செய்யப்படவில்லை எனவும், மேலும் தகவலுக்கு மற்ற அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...