கங்கா மருத்துவமனையில் எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு மைய வெள்ளி விழா

கங்கா மருத்துவமனையில் எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு மையம் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அம்மருத்துவமனை சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனை மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தனது சிறந்த சேவையை சமுதாயத்திற்கு வழங்கி வருகிறது. நுண்ணிய ரத்தநாள மறுசீராய்வு மற்றும் சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் இம்மருத்துவமனை சிறந்து விளங்குகிறது.



கல்வித்துறையில் கங்கா மருத்துவமனை அடிப்படை மற்றும் சிறப்பு பயிற்சிக்கான அங்கீகாரத்தை தில்லி தேசிய தேர்வு வாரியம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுள்ளது.



மேலும், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் ஆகியவற்றால் பிஎச்டி-க்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் 42 நாடுகளைச் சேர்ந்த 1042 மருத்துவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.



இவை மட்டுமல்லாமல் கங்கா மருத்துவமனையின் முக்கிய நோக்கமே, குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டும் என்பதே ஆகும். மேலும், இம்மருத்துவமனை பல்வேறு சமூக சேவைகளான புராஜக்ட் ஹெல்ப்லைன், புராஜக்ட் சேவ த வொர்க்கிங் ஹேண்ட், சுவாசம் திட்டம் மற்றும் ஹோப் ஆப்டர் பயர் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகப்பெரிய மறுவாழ்வு மையத்தை கங்கா மருத்துவமனை நடத்தி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...