அன்னூர் அருகே புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அருகம்பாளையத்தில் புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் மதுபானக்கடை திறக்கபட்டது. இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள்அரசு மதுபான கடையை அகற்றகோரி நேற்று முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களிடம் அன்னூர் வட்டாச்சியர் இருதயராஜ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த போது, உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கடை திறக்கபடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி கடிதம் வழங்க கோரி கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூரில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக 20 நிமிடம் கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...