கோவையில் அனைத்து தகவல்களும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் 'சிட்டிசன்ஸ் ஆப்' விரைவில் அறிமுகம்

கோவை மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் (சிட்டிசன்ஸ் ஆப்) குடிமக்களுக்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அனைத்து அறிவிப்பும் வெளியிடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில், காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசுபாட்டு கருவிகள் 30 இடங்களில் அமைக்கப்படும். அதன்மூலம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாசு இருக்கிறது என்பது குறித்தும், வெப்பநிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் நேர அட்டவணை மற்றும் கோவையில் எந்தெந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை பதிவிறக்கம் செய்தால் போதும், கோவையில் அனைத்து தகவல்களும் அறியலாம். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...