யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற கோவையில் முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளது என ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மத்திய நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு  நடைபெறுதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

மத்திய  அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் மொத்தம் 8755 நபர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த  முதன்மை கண்காணிப்பாளர்கள் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் உக்கடம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போதுமான தளவாடங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வினை கண்காணித்திட மத்திய அரசு தேர்வாணையத்தால் கண்காணிப்பாளர் ஒருவரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை ஆட்சியர் நிலையில் 7 மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 43 உதவி மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...