கோவையில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

சான்றிதழ் வழங்குவதில் நீதிமன்ற அதிகாரத்தை அரசு அதிகாரிகளிடம் வழங்கியதைக் கண்டித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாமதமாக விண்ணப்பிக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கறிஞர் மூலமாக அதனை பெறும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்து நீதிமன்றத்திற்கு பதிலாக ஆர்டிஓ-விடமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

இந்த சட்டத்தைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற கட்டணத்தினை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...