மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு விடப்பட்டிருந்த வீட்டை இடித்து அதிகாரிகள் மீட்பு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்ப்பட்ட 34வது வார்டு வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 18 சென்ட் பூங்கா இடத்தை மனை பிரிவு உரிமையாளரே கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமித்து உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் இன்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் E2 காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை இடித்து அப்பகுதியை மீட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட் இடத்தை மீட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் வாரந்தோறும் மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட இடத்தினை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த வாரம் வி.வி.சி லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நடராஜன் என்பவர் 18 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் செட் அமைத்து அப்பகுதியில் மாடுகளை கட்டி தொழில் செய்து வந்தார். பின்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று அதிகாரிகளால் அப்பகுதியை மீட்டனர். அதேபோல், மற்றொரு பகுதியில் வீடு ஒன்று கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது தகவல் அறிந்து அதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 4 கோடி ரூபாய் மதிப்புடைய ரிசர்வ் சைட்  இடத்தை மீட்டுள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...