புரவங்கரா, கோவையை ‘பசுமை கோயம்புத்தூர்’ ஆக மாற்றும் முயற்சியாக ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியை மேற்கொள்கிறது

புரவங்கரா, கோயம்புத்தூர் மாநகரை பசுமையான கோயம்புத்தூர் ஆக மாற்றும் முயற்சியாக, மாபெரும் ‘மரம் நடுதல்’ என்னும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது, செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ப்ராவிடெண்ட் க்ரீன் பார்க்கில் நடைப்பெற்றது. 



புரவங்கரா மேற்கொண்டிருக்கும் ‘மரம் நடுதல்’ முயற்சியானது, எழில் கொஞ்சும் கோவை நகரின் பழைய அழகையும், இயற்கை சுற்றுப்புறத்தையும் மீட்டெடுக்கும் நல்லெண்ணத்தின் ஒரு சிறிய வெளிப்பாடாகவும், முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு முதல்  மரக்கன்றை நட்டுத் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், புரவங்கரா நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆபரேஷன்ஸ், வீரராகவன் கலந்து கொண்டார். ‘மரம் நடுதல்’ முயற்சியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில், நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, நமது சுற்றுச்சூழலை  பாதுகாப்பதிலும், தொடர்ந்து நீடித்து இருக்கக்கூடிய இயற்கைச் சூழலையும் உருவாக்குவதிலும் புரவங்கரா மிகவும் அக்கறையுடனும், அதிக உத்வேகத்துடனும் செயல்பட்டுவருகிறது. அத்தகைய முயற்சியில், இந்த ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சி ஒரு சிறிய அங்கமாகும். இதுபோன்ற முயற்சிகளின் மூலம் சமூகத்திற்கு  வளமையையும், வளர்ச்சியையும் அளிக்கும் வகையில் புரவங்கரா தொடர்ந்து தனது பங்கினை நிச்சயம் வழங்கும். இங்கு வசிக்கும் மக்கள் இயற்கை சூழ்ந்த பசுமையான சூழலில் வாழ்வது சாத்தியப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அவர்களுடைய சுற்றுச்சூழலானது என்றென்றும் இயற்கையுடன் அமைவதில் நாங்கள் பங்கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.



ப்ராவிடெண்ட் பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் ப்ராவிடெண்ட் ஹவுஸிங்கின் பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘மரம் நடுதல்’ நிகழ்ச்சியில் ஒன்றாக கைக்கோர்த்ததன் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...