கேரள தேயிலை தோட்ட தொழிலாலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தொழிற்சங்களுடான பேச்சு வார்த்தையில் கேரள மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 313 ரூபாய் வழங்கபட்டு வருகிறது. அனால், வால்பாறையில் உள்ள தனியார் நிறுவன தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 234 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு வருகிறது.



ஒரே நிறுவனத்தில் ஒரே தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு வகையான மாறுபட்ட சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 2016-ம் ஆண்டு வரை நாங்கள் சார்ந்திருந்த தொழிற்சங்களுக்கு உறுப்பினர் சந்தா செலுத்தி வந்தோம். 2017 ஜனவரி 1 முதல் சந்தா செலுத்தாமல் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து விலகி விட்டோம்.

தற்போது நாங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத போது தங்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்களில் கையொய்பமிட முயன்று வருகின்றனர். தினக்கூலியாக டி.ஏ-வுடன் சேர்த்து 290 ரூபாயை ஏற்று வேலை செய்ய உள்ளதாக பொய்யான அறிவிப்பை வெளியிட உள்ளனர். எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லாத தங்களை கலந்து ஆலோசிக்காமல் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டால் அது தங்களை கட்டுப்படுத்தாது. 



எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் எஸ்டேட்டின் தொழிலாளர் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக வழங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...