விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 26 துப்புரவு பணியாளர் மற்றும் ஒரு ஆண் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

இதற்காக பின்வரும் தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 2017 ஜூலை 1ம் தேதியில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதிற்கு மிகாமில் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாதர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேற்படி, தகுதிகளுடன் கோவை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகிய விவரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 30-ம் தேதியன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...