கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் தயிர் சேமியாவில் கரப்பான்பூச்சி கிடைந்தாகவும், சுகாதரமற்ற முறையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுபாஷ் சுந்தரம் என்ற இளைஞர் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருபவர் சுபாஷ் சுந்தரம். இவர் இன்று பிற்பகல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார். சாப்பிடுவதற்கு தயிர் சேமியா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கொடுக்கபட்ட தயிர்சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் இது குறித்து நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



மேலும், அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கோவை பந்தய சாலையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், தயிர் சேமியாவில் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஏற்கனவே இதே போன்று ஓரு முறை இந்த ஹோட்டலில் சாப்பிட வந்த போது சாப்பாட்டில் பூச்சி இருந்தாக கூறினார். தொடர்ச்சியாக சுகாதரமற்ற முறையில் உணவில் பூச்சிகள் இருப்பதால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார். கோவையில் இயங்கி வரும் இந்த பிரபல ஹோட்டலுக்கு 10க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...