கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் அனுமதி


கோவை மாவட்டம், கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாயகி (52). இவருக்கு கடந்த ஜூன் 16ம் தேதியன்று காய்யச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, ரங்கநாயகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனிடையே, டெங்கு காய்ச்சலின் பாதிப்பு காரணமாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், உதகையைச் சேர்ந்த ஒருவரும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...